Saturday, February 28, 2026 7:59 pm
ஈரானை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை தொடங்கி உள்ளது. டெஹ்ரானின் வடக்கு , கிழக்கு பகுதிகளில் 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டெஹ்ரானின் ஜோம்ஹரி சதுக்கம், ஹாசன் அபாத் சதுக்கம் உள்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக டெஹ்ரானில் உள்ள ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகம், ஈரான் உளவுத்துறை அலுவலகம், பாதுகாப்பு துறை அமைச்சு, அணுசக்தி திட்டங்களின் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க படைகள் நிலை கொண்டுள்ள கட்டார், பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் பகுதிகளை குறிவைத்து ஈரான் தாக்க துவங்கியுள்ளது. பஹ்ரைனில் அமெரிக்க கடற்படையின் 5ஆவது கடற்படை தலைமையகம் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அபுதாபியில் பெரும் குண்டுவெடிப்பு ஒலி கேட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.. இந்த தாக்குதல் மத்திய கிழக்கு அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. உலக நாடுகள் இந்த நிலைமையை கவனமுடன் அவதானித்து வருகின்றன.

