Friday, February 27, 2026 11:16 am
காலி – பெந்தோட்டை கடலில் நேற்று மாலை நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும், மற்றையவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் 25 வயதுடையவர் எனவும், காணாமல் போனவர் 29 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பேருவளை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடற்படையினர், பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர் மற்றும் பெந்தோட்டை பொலிஸார் இணைந்து காணாமல் போயுள்ள நபரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

