Friday, February 27, 2026 10:08 am
பரந்தன், பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திரங்கள் மீது நேற்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினர் நிறுத்தியபோது சமிக்ஞையை மீறி சென்றமையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த உழவு இயந்திர சாரதி ஒருவர் தப்பிஓடிய நிலையில் மற்றைய உழவு இயந்திர சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது விசேட அதிரடிப்படையினர் ஒருவர் உழவு இயந்திரத்தில் மோதுண்டு காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


