Sunday, February 22, 2026 10:15 am
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வழக்க்ம் போல சீமானின் நாம் தமிழர் கட்சியும் தனியாக தேர்தலை சந்திக்கிறது. திருச்சியில் நேற்று சனிக்கிழமை நடந்த கட்சி மாநாட்டில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் சீமான்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் நடிகர் திருமுருகனை வேட்பாளராக களமிறக்கியிருக்கிறார் சீமான். திருமுருகன் ஒரத்தநாடு அருகே இருக்கும் ஆம்பலாபட்டு என்ற ஊரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக அவரை அங்கே போட்டியிட வைத்திருக்கிறார் என கருதப்படுகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் திமுக எப்போதுமே பலம் வாய்ந்ததாக இருக்கும்.
நடிகர் திருமுருகன் களவாணி படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமானவர். முதல் படத்திலேயே அவர் தனது நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார். அதனையடுத்து அரவான், ஈட்டி, 49 ஓ, பென்சில், அட்டு, டார்ச் லைட், டீசல் உள்ளிட்ட படங்களில் நடித்தார். களவாணி படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான தமிழ்நாடு அரசு விருதை கடந்த 2010ஆம் ஆண்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

