Monday, February 16, 2026 12:07 pm
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருமுருகண்டி ஏ9 பிரதான வீதியில் நேற்று மோட்டார் சைக்கிளும் காரும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு நபர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார், மற்றொருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து நடந்த இடத்திலிருந்து காரில் காயமடைந்த நபரை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.
பின்பு காரை செலுத்தி வந்த திருகோணமலை வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவு தற்போது விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

