Wednesday, February 11, 2026 3:51 pm
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் சிலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஜனாதிபதி அவ்விடத்திற்கு வருகை தந்த போது தோட்டத் தொழிலாளர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது சம்பளத்தை அதிகரித்தமைக்காக நன்றியையும் தெரிவித்தனர்.

இதன்போது தோட்டத் தொழிலாளர்கள், “எமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமல்லாமல், எமது பிரச்சினைகளை நேரில் வந்து கேட்டறிந்த ஒரே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள்தான்” எனத் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.


