Tuesday, December 16, 2025 4:17 pm
அபுதாபியில் நடைபெறும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவை 2 கோடி இந்திய ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வாங்கியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரான கெமரூன் கிரீன், 25.02 கோடி இந்திய ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இது ஐபிஎல் ஏல வரலாற்றில் ஒரு சாதனையாக காணப்படுகின்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே அவுஸ்திரேலிய வீரருக்காக தீவிர போட்டி நிலவிய போதிலும் ஷாருக் கான் உரிமையாளராக உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கிரீனைத் தன்வசப்படுத்தியது.
தென்னாப்பிரிக்க அணியின் டேவிட் மில்லர் 2 கோடி இந்திய ரூபாவிற்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான குயிண்டன் டி கொக் 1 கோடி இந்திய ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியினால் வாங்கப்பட்டுள்ளார்.
வெங்கடேஸ் ஐயரை 7 கோடி இந்திய ரூபாய்க்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கியுள்ளது.
இங்கிலாந்து அணியின் பென் டக்கட் 2 கோடி இந்திய ரூபாயக்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணி வாங்கியுள்ளது.

