Monday, November 9, 2026 2:17 pm
இலங்கையில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களில் சுமார் 4 மில்லியன் பேர் இன்னும் வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறவில்லை என்று உள்நாட்டு தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்துகொண்டு பேசிய அவர், இலங்கையில் சுமார் 17 மில்லியன் வயது வந்தவர்கள் உள்ள நிலையில், அவர்களில் 13 மில்லியன் பேர் ஏற்கனவே ரின் எண்ணைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய சட்டத்தின்படி, 18 வயஅதற்கு மேற்பட்ட அனைவரும் ரின் எண்ணைப் பெறுவது கட்டாயமாகும். முன்னதாக, சில குறிப்பிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே இந்த நடைமுறை அமுலில் இருந்தது.
ரின் பதிவு குறித்து பொதுமக்களிடையே நிலவும் கவலைகளுக்குப் பதிலளித்த ஆணையாளர், ரின் எண்ணைப் பெறுவது என்பது ஒரு நபர் தானாகவே வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.
பதிவு செயல்முறை குறித்த தவறான புரிதல்கள் பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை உருவாக்கியுள்ளதாகவும், சில கவலைகள் இன்னும் நீடிப்பதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் வரி முறையைச் சீரமைக்கவும் மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டே, TIN பதிவு செய்வதற்கான சட்டப்பூர்வத் தேவை அறிமுகப்படுத்தப்பட்டது என்று குமார வலியுறுத்தினார்.
வயது வந்தவர்கள் அனைவரும் பதிவு செய்வது கட்டாயம் என்றாலும், வரி செலுத்துவதற்கான தகுதியைக் கொண்ட நபர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும் என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

