Thursday, July 16, 2026 7:39 am
ஈராக்கிலிருந்து தங்களுடைய ராணுவம் செப்.30க்குள் முழுமையாக வெளியேறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். கடந்த 2003ம் ஆண்டு அப்போதைய ஈராக்கின ஜனாதிபதி சதாம் உசேனை வீழ்த்தியதற்கு பிறகு, உடனே வெளியேறியிருக்க வேண்டிய அமெரிக்க படைகள் 23 ஆண்டுகளின் பின்னர் வெளியேற இருக்கின்றன. வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ,ஈராக் ஜனாதிபதி அலி அல்-சைதி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்புக்குப் பின்னர் அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஈராக்கில் கடந்த 2003ம் ஆண்டு சதாம் உசேன் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக போரிட அமெரிக்க ராணுவம் உள்ளே நுழைந்தது. அதன் பின்னர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக களமிறங்கியிருந்தது அமெரிக்க ராணுவம். இப்படியாக 23 ஆண்டுகள் ஈராக்குக்குள் ஓட்டிவிட்ட நிலையில், இனி ஈராக்கில் எந்த வேலையும் இல்லை. பயங்கரவாதிகளை எதிர்க்கும் பணிகளை ஈராக் அதிரடி படைக்கு கை மாற்றிவிட்டோம் என்று கூறி, அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படுகின்றன. இது கூட ட்ரம்ப் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி ஜோ படைன் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான், அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

