Tuesday, September 1, 2026 11:43 am
இந்த ஆண்டு மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 2030 உலகக் கிண்ண போட்டிக்கான ஒளிபரப்பு உரிமைகளை SBS பெற்றுள்ளது. இதன் மூலம், இந்நிகழ்வு அவுஸ்திரேலியாவில் மீண்டும் இலவசமாக ஒளிபரப்பப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆடவர் உலகக் கிண்ண , போட்டியின் 100வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், மொராக்கோ, போத்துகல் ,ஸ்பெயின் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன. , நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் SBS , பீபா ஆகியவற்றுக்கு இடையேயான முக்கியமான கூட்டாண்மை தொடர்கிறது.
2026 உலகக் கிண்ணப் போட்டியை 18 மில்லியனுக்கும் அதிகமான அவுஸ்திரேலியர்கள் கண்டுகளித்ததோடு, இது SBS தொலைக்காட்சியின் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான உலகக் கிண்ண ஒளிபரப்பாகவும் அமைந்தது.
அடுத்த ஆண்டு பிறேஸிலில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ணப் போட்டி சனல் டென் மற்றும் பாரமவுண்ட்+ இல் ஒளிபரப்பப்படும்.

