Saturday, October 24, 2026 5:23 pm
நேபாளமும்,பங்களாதேஷும் இணைந்து நடத்தும் 2027 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளன. 17 நாட்களில் 41 போட்டிகள் இரண்டு நாடுகளிலும் நடைபெற உள்ளன.
காத்மாண்டில் உள்ள இரண்டு மைதானங்களில் நேபாளம் 15 போட்டிகளையும், மீதமுள்ள 26 போட்டிகளையும் பங்களாதேஷ் நடத்தும். கீர்த்திபூரில் உள்ள TU சர்வதேச கிரிக்கெட் மைதானம், ‘ஏ’ பிரிவில் நேபாளத்தின் போட்டிகள் உட்பட ஆறு போட்டிகளையும், அப்பர் முல்பானி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ‘டி’ பிரிவின் போட்டிகள் உட்பட ஒன்பது போட்டிகளையும் நடத்தும்.
இரண்டு முறை சம்பியனான இந்தியா, அயர்லாந்து ,மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றுடன் ‘ஏ’ பிரிவில் நேபாளம்,இடம்பெற்றுள்ளது. நேபாளம் தனது முதல் போட்டியை 2027 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதிகாலை 9:30 மணிக்கு கீர்த்திபூரில் உள்ள TU மைதானத்தில் அயர்லாந்துக்கு எதிராகத் தொடங்குகிறது.
16 அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. காத்மாண்டிவில் நடைபெறவுள்ள ‘ஏ’ பிரிவில் நேபாளம், இந்தியா, அயர்லாந்து,மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. சட்டோகிராமில் நடைபெறவுள்ள ‘பி’ பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் , சமோவா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. சில்ஹெட்டில் நடைபெறவுள்ள ‘சி’ பிரிவில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நைஜீரியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. முல்பானியில் நடைபெறவுள்ள ‘டி’ பிரிவில் இங்கிலாந்து, இலங்கை, அமெரிக்கா , ஸ்காட்லாந்த் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு மற்றும் தளவாடக் காரணங்களுக்காக, பாரம்பரியப் போட்டியாளர்களான இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனிப் பிரிவுகளில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொடர் 2027 ஆம் ஆண்டுன் ஜனவரி 21 ஆம் திகதி சில்ஹெட்டில் தொடங்குகிறது. இதில் பங்களாதேஷ் ஐக்கிய அரபு அமீரகத்தையும், அவுஸ்திரேலியா நைஜீரியாவையும் எதிர்கொள்கின்றன.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று இடங்களைப் பெறும் அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறும். ஒவ்வொரு சூப்பர் சிக்ஸ் குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள், சட்டோகிராமில் உள்ள மதியூர் ரஹ்மான் கிரிக்கெட் மைதானத்தில் பெப்ரவரி 4 ஆம் திகதி நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இறுதிப் போட்டி பிப்ரவரி 6 ஆம் திகதி அதே மைதானத்தில் நடைபெறும்.
நேபாளமும் பங்களாதேஷு தானாகவே தகுதி பெற்றுள்ளன. 2025 ஆம் ஆண்டு முதல் ஒன்பது இடங்களைப் பிடித்த அணிகளான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை ,மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவையும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன.
மீதமுள்ள ஐந்து இடங்கள் பிராந்திய தகுதிப் போட்டிகள் மூலம் அணிகளுக்குச் சென்றன: ஆப்பிரிக்காவிலிருந்து நைஜீரியா, கிழக்கு ஆசிய-பசிபிக் பகுதியிலிருந்து சமோவா, ஐரோப்பாவிலிருந்து ஸ்காட்லாந்த், ஆசியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் , அமெரிக்காவிலிருந்து அமெரிக்கா.

