Monday, November 2, 2026 9:02 am
ஜப்பானிய ஆராய்ச்சி நிறுவனமான ‘டெய் கோகு டேட்டாபேங்க்’ (Teikoku Databank) நடத்திய ஆய்வின்படி, ஜப்பானில் உள்ள 195 முன்னணி உற்பத்தியாளர்களின் 1,477 உணவு , பானப் பொருள் ஆகியவற்றின் விலை நவம்பர் மாதம் அதிகரிக்கவுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் விலை உயர்த்தப்பட்ட 150 பொருட்களுடன் ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் ஆகும்.
இந்த நிறுவனத்தின் தகவல்படி, சாஸ்கள் , மயோனைஸ் உள்ளிட்ட சுவையூட்டும் பொருட்கள் (seasonings) அதிக எண்ணிக்கையில், அதாவது 644 பொருட்கள், விலை உயர்வுக்கு உள்ளாகின்றன. அடுத்தபடியாக, மது , மது அல்லாத பானங்கள் பிரிவில் 417 பொருட்கள் விலை உயர்வைச் சந்திக்கின்றன.
இந்த ஆண்டு விலை உயர்த்தப்பட்ட உணவு , பானப் பொருட்கள் போன்றவற்றின் மொத்த எண்ணிக்கை 20,327 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, இந்த எண்ணிக்கை 20,000-ஐக் கடந்துள்ளது.
அடுத்த ஆண்டைப் பொறுத்தவரை, நிறுவனங்கள் தங்களின் கூடுதல் செலவுகளை விலையில் சேர்க்கும்போது, நுகர்வோரின் எதிர்வினைகளை கவனமாகக் கணித்துச் செயல்படுவதால், விலை உயர்வு வேகம் சற்று குறையக்கூடும் என்று ‘டெய் கோகு டேட்டாபேங்க்’ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

