Wednesday, October 21, 2026 3:22 pm
நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டன் ,அவரது துணைவரான ஆர்ஜென்ரீனா ஃபீல்டு ஹொக்கி வீரருமான நிக்கோலஸ் கீனன் ஆகியோர் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்க்கின்றனர் என அந்தத் தம்பதியினர் திங்களன்று அறிவித்தனர்.
“மிகவும் சிறப்பான ஒருவர் வரவிருக்கிறார். 2027-ல் சந்திப்போம், குட்டிப் பாப்பா,” என்று அவர்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில் எழுதியுள்ளனர்.
“எங்கள் கருமுட்டை தானம் செய்தவருக்கும், எங்கள் வாடகைத் தாய் லிசாவுக்கும், . அவர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே போதாது. நீங்கள் இல்லாமல் இது எதுவும் சாத்தியமாகியிருக்காது,” என்றும் அவர்கள் மேலும் கூறினர்.
ஜெட்டனின் கட்சியான D66-ம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தங்களுக்கு நண்பர்களாக இருக்கும், ஏற்கெனவே குழந்தைகளைக் கொண்ட ஒரு தம்பதியினரால் இந்தக் கர்ப்பம் சாத்தியமானது என்று கூறியுள்ளது. “வாடகைத் தாயும், கருமுட்டை தானம் செய்தவரும் டச்சுக்காரர்கள்,” என்று அந்த அறிக்கை தொடர்ந்தது.
இது ஒரு வணிக ரீதியான வாடகைத் தாய் முறை அல்ல. வாடகைத் தாயும், கருமுட்டை தானம் செய்பவரும் ஜெட்டன் மற்றும் கீனனுக்கு அறிமுகமானவர்கள். இந்த வழியில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அந்த இரு வருங்காலத் தந்தையர்களின் கனவை நிறைவேற்ற உதவ முடிந்ததில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஜெட்டன் , கீனன் ஆகிய இருவரும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தங்களது நிச்சயதார்த்தத்தை அறிவித்தனர்.
“வாடகைத் தாயாக இருப்பது, எங்கள் அன்பு நண்பர்களின் கனவை நனவாக்க உதவும் ஒரு மிகச் சிறப்பான வழியாக உணர்கிறேன்,” என்று வாடகைத் தாயான லிசா கூறியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

