Wednesday, July 15, 2026 11:32 am
பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படையின் கட்டளை , கட்டுப்பாட்டு, தளவாட, பெட்ரோலியம் , இராணுவ உபகரண நிலையங்கள் மீதும், குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளம் ஒன்றின் மீதும்
புதன்கிழமை அதிகாலையில், தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவலர் படை உரிமை அறிவித்துள்ளது. அப்பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ சொத்துக்கள் மீதான தாக்குதல்களைத் தொடரப்போவதாகவும் அது எச்சரித்துள்ளது.
ஈரான் மீது ஏழு மணி நேரம் நீடித்த நான்காவது இரவுத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ள நிலையிலும், ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானிய கப்பல் போக்குவரத்திற்கான தனது முற்றுகையை அமெரிக்கா மீண்டும் அமுல் படுத்திய பின்னர் தெஹ்ரானின் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

