Monday, October 26, 2026 5:39 pm
ஹற்றனில் இன்று திங்கட்கிழமை[26] பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஹற்றன் தனியார் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பஸ்கள் சேதமடைந்தன.
பிற்பகல் 3.30 மணியளவில் மண் சரிந்து பஸ்களின் பின்பகுதிகளின் மீது விழுந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மேலதிக சேதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பஸ் நிலையப் பொறுப்பாளர்கள்
அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற பஸ்களை அங்கிருந்து அகற்றினர்.

