Tuesday, September 8, 2026 10:51 am
உக்ரைன் , ரஷ்யா ஆகியவற்றுக்கிடையேயான வார இறுதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை உயர்மட்ட அமெரிக்கத் தூதர் ஒருவர் திங்களன்று பாராட்டினார். இது, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவின் மிக மோசமான மோதலை முடிவுக்குக் கொண்டுவர, மும்முனை அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யப் படைகள் அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்தபோது தொடங்கிய சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு புது முயற்சியாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரைனின் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் உயர்மட்ட அமெரிக்கத் தூதர்களைத் தனித்தனியாகச் சந்தித்தனர்.
“கூடுதல் மும்முனைப் பேச்சுவார்த்தைகளைத் திட்டமிடுவதில் முன்னேற்றம் உட்பட, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” என்று அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் X தளத்தில் எழுதியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகக் கூட்டாளியான விட்காஃப், ட்ரம்பின் மருமகனும் தனது பேச்சுவார்த்தைக் கூட்டாளியுமான ஜாரெட் குஷ்னருடன் வார இறுதியில் ரஷ்யாவுகும் ,உக்ரைனுக்குப் பயணம் செய்தார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து இரு தூதர்களும் புதிய மற்றும் “மிகவும் பயனுள்ள” முன்மொழிவுகளைக் கொண்டு வந்ததாக ஒரு மூத்த உக்ரேனிய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை AFPயிடம் தெரிவித்தார், ஆனால் குளிர்காலம் வரையிலும் சண்டை தொடர வாய்ப்புள்ளது என்று ஜெலென்ஸ்கி எச்சரித்தார்.மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவுடனு, உக்ரைனுடனும் மும்முனைப் பேச்சுவார்த்தை நடத்துவதை ரஷ்யா திங்களன்று நிராகரிக்கவில்லை.
ட்ரம்பின் தூதர்கள், ஐரோப்பிய அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தானும் தனது பேச்சுவார்த்தைக் குழுவும் “தங்கள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாக” ஜெலென்ஸ்கி கூறினார், ஆனால் அந்த நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பதை உக்ரேனிய தலைவர் விரிவாகக் கூறவில்லை.

