Tuesday, October 20, 2026 8:11 am
மேற்குக் கரையில் உள்ள அபு ஃபலாஹ் கிராமத்தில் வெள்ளிக்கிழமை பாலஸ்தீனிய ஆலிவ் அறுவடையின் போது வெடித்த மோதல்களைப் பற்றிய செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, இஸ்ரேலிய குடியேறிகளின் தாக்குதலில் காயமடைந்த வாஷிங்டன் போஸ்ட் புகைப்பட பத்திரிகையாளர் ஹைடி லெவின், இஸ்ரேலின் பெட்டா டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை, சிகிச்சை பெற்றார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வார இறுதியில் ஒரு வெளிநாட்டு பத்திரிகையாளர் , ஐரோப்பிய தூதர்கள் மீதான தாக்குதல்கள் உட்பட, குடியேறிகளின் வன்முறை அலை தொடர்பாக திங்களன்று 10 பேரை கைது செய்ததாக இஸ்ரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் புகைப்படக் கலைஞர் ஹைடி லெவின், அபு ஃபலா கிராமத்தில் இளம் ஆண் குடியேறிகள் கூட்டத்தால் தாக்கப்பட்டார். இதில் அவருக்கு பல விலா எலும்புகளும் முதுகெலும்புகளும் உடைந்தன. கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட அவரது ஒரு விரலுக்காக அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. மேலும், அவரது உடலின் கீழ்ப்பகுதியில் ஏற்பட்ட கத்திக்குத்து காயங்களுக்கு தையல்கள் போடப்பட்டு, அவர் குணமடைந்து வருகிறார்.
ஒரு நாள் கழித்து, முகமூடி அணிந்த குடியேறிகள், தாய்பே என்ற கிறிஸ்தவ கிராமத்திற்குச் சென்ற ஐரோப்பிய தூதர்களையும் ,பிறரையும் தாக்கினர்.
சமீபத்திய ஆண்டுகளில் குடியேறிகளின் வன்முறை அதிகரித்துள்ளது. பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதல்களுக்காக, தாக்குதல் நடத்துபவர்கள் அரிதாகவே கைது செய்யப்படுகிறார்கள் அல்லது தண்டிக்கப்படுகிறார்கள் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
தூதர்கள் மீதான இந்தத் தாக்குதல், பெல்ஜியத்தின் துணைத் தூதர், பிரெஞ்சு , போலந்து தூதர்கள் , கத்தோலிக்கப் பிரதிநிதிகள் ஆகியோரை இலக்காகக் கொண்டது.

