Tuesday, June 30, 2026 7:24 am
ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைத்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டோஹாவில் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார் .
ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட ஒரு சுருக்கமான பதிவில், இந்தச் சந்திப்புகள் கட்டார் தலைநகரில் நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார். அதேவேளையில், முக்கியமான அந்த நீர்வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் துண்டித்த பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு, யுத்தத்தை நிறுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அமெரிக்க அதிகாரிகளின் டோஹா பயணத்திற்கும், ஈரானிய தூதுக்குழு அந்நகருக்கு வருகை தந்ததற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திங்கள்கிழமை இரவு, ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, கூறினார்.
“நாங்கள் இன்னும் இறுதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தும் கட்டத்திற்குள் நுழையவில்லை. வரும் நாட்களில், எந்த மட்டத்திலும் அமெரிக்கத் தரப்புடன் நாங்கள் எந்தப் பேச்சுவார்த்தைக் கூட்டங்களையும் நடத்த மாட்டோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

