சம்பியன்ஸ் கிண்ண பட்டத்தை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு , இந்தியா ரூ.20 கோடி ($2.24 மில்லியன்) பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து ரூ.12 கோடி ($1.12 மில்லியன்) பெற்றது. போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை $6.9 மில்லியன் (ரூ.60 கோடி) ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அணிகளுக்கு அவர்களின் செயல்திறனின் அடிப்படையில் கணிசமான அளவிற்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டன. அரையிறுதியில் தோற்று வெளியேறிய இரண்டு அணிகளும் தலா ரூ.4.6 கோடி ($560,000)யும்,
ஐந்தாவது , ஆறாவது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு தலா ரூ.2.9 கோடி ($350,000)யும் ,ஏழாவது,எட்டாவது இடத்தைப் பிடித்த அணிகளுக்கு ரூ.1.1 கோடி ($140,000) வழங்கப்பட்டன.
கூடுதலாக, போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் குறைந்தபட்சம் ரூ.1 கோடி ($125,000) பரிசு உறுதி செய்யப்பட்டது. தவிர, குரூப் ஆட்டங்களில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு ரூ.28 லட்சம் ($34,000) போனஸும் வழங்கப்பட்டன.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு