Monday, October 26, 2026 5:31 pm
அமெரிக்க கடற்படைக் கப்பலான யுஎஸ்எஸ் கான்பெரா (LCS-30), எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக இன்று செவ்வ்வாய்க்கிழமை (26) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
127.6 மீற்றர் நீளமுள்ள இந்தக் கடலோரப் போர்க் கப்பலுக்கு தளபதி சி. டோல்ஸ் தலைமை தாங்குகிறார். இது 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்தக் கப்பல் இதற்கு முன்னர் இந்த ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தது.

