Tuesday, July 7, 2026 7:53 am
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) சமீபத்திய எபோலா பரவலால் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 500-ஐத் தாண்டியுள்ளது என அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, நாட்டில் 506 இறப்புகள் உட்பட 1,561 உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 254 நோயாளிகள் குணமடைந்துள்ளனர், அதே நேரத்தில் உறுதிசெய்யப்பட்ட 628 நோயாளிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டோ அல்லது மருத்துவமனையிலோ உள்ளனர்.
354 சந்தேகத்திற்கிடமான நோயாளிகள் அடியாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நோய் பரவல் இதுவரை மூன்று மாகாணங்களில் உள்ள 36 சுகாதார மண்டலங்களைப் பாதித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறியது.
பண்டிபுக்யோ எபோலா வைரஸால் ஏற்படும் எபோலா நோய்க்கா

