Friday, July 10, 2026 4:48 pm
முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான அரசு இறுதிச் சடங்கு நிறைவடைந்துவிட்டதாக, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
பல்லாயிரக்கணக்கான துக்கப்படுபவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, பல நாட்கள் நடைபெற்ற அரசு இறுதிச் சடங்கின்போது அவரது சவப்பெட்டி நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. பின்னர், வடகிழக்கு ஈரானிய நகரமான மஷ்ஹத்தில் கமெனி நல்லடக்கம் செய்யப்பட்டார்.
பிரஸ் டிவி தகவலின்படி, மறைந்த உச்ச தலைவர் அலி கமெனிக்கான ஒரு வார கால இறுதிச் சடங்குகளில் சுமார் 4.3 கோடி மக்கள் பங்கேற்றனர். பெப்ரவரியில் அவர் இறந்ததைத் தொடர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, “உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஊர்வலம்” என்று அரசு ஊடகங்கள் விவரித்த இந்த ஊர்வலம், ஈரான் , ஈராக் ஆகிய நாடுகளில் பல நகரங்களில் நடைபெற்றது.
தலைவரின் சொந்த ஊரான மஷ்ஹத்தில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் நடைபெற்ற இறுதி நல்லடக்கத்துடன் இந்த துக்க காலம் நிறைவடைந்தது. வாரம் முழுவதும், தெஹ்ரான், கோம், நஜாஃப் , கர்பலா வழியாக ஊர்வலங்கள் சென்றன. தேசிய ஒற்றுமையையும், நாட்டின் ஸ்திரத்தன்மையையும் வெளிப்படுத்த அதிகாரிகள் பயன்படுத்திக்கொண்ட பெருந்திரளான மக்களை இவை ஈர்த்தன. சமீபத்திய அமெரிக்க-இஸ்ரேல் போரின் பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக ஏற்பட்ட பல மாத தாமதங்களுக்குப் பிறகு இந்த விழாக்கள் நடைபெற்றன.

