Friday, July 10, 2026 7:47 pm
இலங்கை மருத்துவர்கள் குழு ஒன்று, இடுப்புப் பகுதியில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாகப் பிரித்துள்ளது.
பேராதனை போதனா மருத்துவமனை, சிறிமாவோ பண்டாரநாயக்க சிறப்பு குழந்தைகள் மருத்துவமனை , பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகியவற்றின் மருத்துவக் குழுக்களால் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
லினுலி தருல்யா ,லித்துலி மனுல்யா என்ற இந்த இரட்டையர்கள் 2021-ஆம் ஆண்டு பிறந்தனர். ஜூன் 10-ஆம் தேதி நடைபெற்ற அறுவை சிகிச்சையின் மூலம் அவர்கள் பிரிக்கப்பட்டனர்.

