ஹிமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட பெரும் நிலச்சரிவை தொடர்ந்து பஸ் ஒன்று இடிபாடுகளுக்கு அடியில் புதைந்ததில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் பிலாஸ்பூர் துணை ஆணையர் ராகுல் குமார், கூறினார்.
பஸ்ஸில் 30க்கும் மேற்பட்டோர் இருந்தனர், இருப்பினும் இந்த நேரத்தில் சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்று துணை ஆணையர் தெரிவித்தார்.
மலைச்சரிவில் இருந்து சேறும், பாறைகளும் சரிந்து பஸ் மீது மோதியது.நிலச்சரிவின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால், வாகனம் முழுவதுமாக இடிபாடுகளுக்குள் புதைந்தது “பயணிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு” என்று சம்பவ இடத்தில் இருந்த ஒரு பொலிஸ்காரர் கூறினார்.