Tuesday, April 7, 2026 12:24 pm
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்,
பெரம்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜய், சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 31ம் திகதி துவங்கி, ஏப்ரல் 06ம் திகதி வரை நடைபெற்றது. மொத்தமாக 7150 பேர் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கொளத்தூர் தொகுதியில் 4வது முறையாக திமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது. தேர்தல் விதிகளை மீறி அவர் செயல்பட்டதாக அதிமுக சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு பின்னர் ஏற்கப்படதாக தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

