Friday, October 24, 2025 12:25 pm
வெனிசுலா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வெனிசுலாவின் டாச்சிரா மாகாணத்தின், பாராமில்லோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று, ஓடுதளத்தை விட்டு மேலே பறந்த சில நிமிடங்களிலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் விழுந்ததையடுத்து விமானம் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் விமானி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

