சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழக மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி விஷமிகளால் அடித்து நொருக்கபட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுழிபுரம் மேற்கு கலைமகள் விளையாட்டு கழகத்தின் மைதானத்தில் புலம்பெயர் தேச உறவுகளின் நிதிப் பங்களிப்புடன் பசுமை புரட்சி திட்டத்தின் கீழ் குடி நீர் வழங்குமுகமாக நீர்தாங்கி ஒன்று அமைக்கபட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நீர் தாங்கி விஷமிகளால் தாக்கப்பட்டு உடைக்க பட்டுள்ளது .