Sunday, April 5, 2026 9:17 pm
தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை பார்ப்பதில் ஏராளமானோர் ஆர்வம் காட்டியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இணையப் பக்கத்தில் விஜய்யின் வேட்பு மனு விவரங்களை 3.25 லட்சத்துக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30 ஆம் திதி, சென்னை பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்தார் விஜய். அந்த மனுவில், தன் மீது எவ்வித குற்ற வழக்கும் இல்லை என விஜய் தெரிவித்து இருந்தார்.
திருச்சி கிழக்கு தொகுதியில் ஏப்ரல் 1 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த 2025 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த மாநாட்டின்போது, தன் பாதுகாவலர்கள் தாக்கியதாக கூறப்படும் புகாரில், கூடக்கோவில் பொலிஸில் வழக்கு பதிவுபட்டுள்ளதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். அதோடு, இந்த குற்ற வழக்கு பற்றி, எந்தவித சம்மனோ, தகவலோ வரவில்லை எனவும் இப்போது தெரிய வந்ததால், இதில் குறிப்பிட்டுள்ளதாகவும் காரணத்தை விஜய் கூறியுள்ளார். இதனால், பெரம்பூரில் தாக்கல் செய்த விஜயின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும், சென்னை கொளத்துாரில் பிரச்சாரம் செய்யும்போது, விதிகளை மீறியதாக விஜய் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளதாகவும், திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் விஜய் குறிப்பிட்டுள்ளார். அந்த தகவலையும் பெரம்பூர் மனுவில் இணைத்து புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.
பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட விஜய்யின் பிரமாண பத்திரங்களை 3 லட்சத்து 4 ஆயிரம் பேர் ட பதிவிறக்கம் செய்துள்ளனர். திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் பிரமாண பத்திரங்களை சுமார் 21 ஆயிரம் பேர் டவுன்லோடு செய்துள்ளனர். மொத்தமாக விஜய்யின் பிரமாண பத்திரங்களை 3.25 லட்சம் பேர் டவுன்லோடு செய்து பார்த்துள்ளனர். அவருக்கு அடுத்தப்படியாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் மு.க.ஸ்டாலினின் பிரமாண பத்திரத்தை சுமார் 1.33 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

