Monday, March 30, 2026 9:18 pm
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி முதல் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கவிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக்கழகம் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. நேற்று நடந்த கூட்டத்தில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை விஜய் நேற்று அறிவித்தார்.
சென்னை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் போட்டியிடுகிறார். அதோடு இன்று பெரம்பூர் தொகுதியில் விஜய் பிரச்சாரத்தை தொடங்கினார். அதன்பின் கொளத்தூர் உள்ளிட்ட சில பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.. வழக்கம்போல் திமுக ஒரு தீயசக்தி.. திமுகவிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் பேசினார். அதோடு, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பேசினார்.
பிரச்சாரத்திற்கு முன்பு அவர் பெரம்பூர் தேர்தல் அலுவலகத்திற்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவில் தனது அசையும் சொத்துக்களின் மதிப்பு 404.58 கோடி எனவும் சுயமாக வாங்கிய அசையா சொத்தின் மதிப்பு 92 கோடி எனவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். விஜய் வாங்கியுள்ள அசையா சொத்தின் நடப்பு சந்தை மதிப்பு 220 கோடி என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

