Wednesday, April 8, 2026 5:05 pm
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையம் திமுகவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. அக்கட்சிக்கு மூன்று தொகுதிகள் வரை ஒதுக்க முக ஸ்டாலின் முன் வந்தும் தேர்தலில் இருந்து விலகுவதாக கமல் அறிவித்தார். திமுகவுடன் கூட்டணி அமைப்பதால் எப்படியும் வெற்றிபெற்றுவிடலாம் என நம்பி 60 பேர் தலா 50 ஆயிரம் ரூபாய் செலுத்தி கட்சி தலைமையிடம் விருப்பமனுவை வாங்கினர்.
ஆனால், தேர்தலில் போட்டியில்லை என கமல் அறிவித்ததும் அவர்களில் பலரும் விருப்பமனு தொகையை திருப்பி கேட்டதாக செய்திகள் வெளியானது. அதை திருப்பிக் கொடுக்க முடியாது. அது கட்சி நிதிக்கு சென்று விட்டது என கமல் சொல்லிவிட்டதாக செய்திகள் வெளியானது. இதை பலரும் ட்ரோல் செய்தனர்.
ஆனால் அது உண்மையில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. நாளை முதல் 16ம் தேதிக்குள் விருப்பமனு கட்டணத்தை சென்னையில் உள்ள மக்கள் நீதி மையத்தின் தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மக்கள் நீதி மையம் அறிவித்திருக்கிறது.

