வல்வெட்டி த்துறை அருள் மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பதினைந்தாம் நாள் சித்திரா பெளர்ணமி இந்திரவிழா உற்சவம் வல்லை நெடியங்காடு திருச்சிற்றம்பலம் விநாயகர் ஆலய முன்றலில் இருந்து பக்திபூர்வமாக ஆரம்பமாகியது.
வல்லை நெடியங்காடு திருச்சிற்றம்பலம் விநாயகர் ஆலய மூலவருக்கு விஷேட அபிஷேக ஆராதனை தொடர்ந்து வல்வெட்டி த்துறை அருள் மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மனுக்கு விஷேட, ஆராதனை தொடர்ந்து சித்திரை தேர் வீற்று வெளிவீதியுடாக விநாயகர்,வள்ளி, தெய் வானை,முருகன் ஆகிய தெய்வங்கள் திருப்பல்லாக்கில் வீற்று வல்லை நெடியங்காடு கிராம வழி வீதியூடாக வலம் வந்து நள்ளிரவு 12 மணியளவில் யாழ் வல்வெட்டி த்துறை அருள் மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானத்தினை வந்தடைந்தார்.
நல்லூர் பாலமுருகன் குழுவின நாதஸ்வர இசை , நாட்டியஞ்சலி ,,ஆசையினை வென்ற துறவி வில்லிசையும்,பரதி சுரபி கலாமன்ற த்தின் நாட்டியார்ப்பணம், ,60 அடி இராட்சத புகைக்குண்டு விண்ணில் எவுதல் என்பன நடசிபெற்றன.
விநாயகர், கிருஷ்ணன், சீதை,சிவபெருமான்,உமாதேவியார்,லக்சுமி போன்ற தெய்வங்களின் 100 அடி உயரத்திலான மின் விளக்கேற்றிய பதாதைகளும்,மின் விளக்கினால் அலங் கரிக்கப்பட்ட வர்ண தோரணபந்தல் களும்,இரு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளது.
தேவஸ்தான பிரதமகுரு வைத்தீஸ்வர குருக்களினால் மஹோற்சவ நடைபெற்றதுடன் கடந்த 28.04 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ,14. ஆம் திகதி மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.
