Saturday, January 17, 2026 8:10 pm
வட்டுக்கோட்டை – மாவடி சந்தி பகுதியில் வேகமாகச் சென்ற ஹையேஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தூண் ,வேலி ஆகியவற்றின் மீது மோதியது.
மூளாய் பக்கத்தில் சென்ற ஹையேஸ் வாகனம் மாவடி சந்தி ஊடாக சித்தங்கேணி நோக்கிச் செல்வதற்காகத் திரும்பியுள்ளது. கட்டுப்படுத்த முடியாத வேகம் காரணமாக சித்தங்கேணி பக்கம் திரும்பிய வாகனம் வலது பக்கத்துக்கு மாறி வீதியோரத்தில் இருந்த தூண் வேலி ஆகியவற்றை மோதித்தள்ளியது.

