Sunday, February 1, 2026 8:53 pm
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெய்லர் படத்தின் முதல் பாகம் பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரெட் ஜெயண்டுடன் ரஜினி இன்னொரு படத்தில் இணைய போவதாக தற்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. அந்தப் படத்தை ஒரு வேளை எச் வினோத் இயக்குவார் அல்லது வீரதீர சூரன் திரைப்படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

