Saturday, January 24, 2026 7:24 am
ராய்ப்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில் இந்திய அணி 209 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை வெறும் 15.2 ஓவரில் எட்டிப்பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ரி20 கிறிக்கெற் வரலாற்றில் இந்திய அணி வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். முன்னதாக 2023ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ஓட்டங்களை இந்தியா சேசிங் செய்திருந்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் 209 ஓட்டங்களைத் துரத்தி அந்தச்
209 ஓட்டங்கள் – எதிர் நியூசிலாந்து (ராய்ப்பூர், 2026)
209 ஓட்டங்கள்- எதிர் ஆஸ்திரேலியா (விசாகப்பட்டினம், 2023)
208 ஓட்டங்கள்- எதிர் மேற்கிந்திய தீவுகள் (ஹைதராபாத், 2019)
20 ஓட்டங்கள் – எதிர் இலங்கை (மொஹாலி, 2009)
200 ஓட்டங்களுக்கும் மேலான இலக்கை அதிக பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற புதிய உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. பொதுவாக 200 ஓட்டங்களைத் துரத்துவதே கடினம். ஆனால், இந்திய அணி 28 பந்துகள் மீதம் இருக்கும்போதே இலக்கை எட்டிப் பிடித்து நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதற்கு முன் 2025ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி 24 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. அதனை இந்தியா தற்போது முறியடித்துள்ளது.
அதிகமுறை 200 ஓட்டங்களைத் துரத்திய அணிகள்
சர்வதேச ரி20 போட்டிகளில் 200 ஓட்டங்களுக்கும் மேலான இலக்கை அதிகமுறை வெற்றிகரமாகத் துரத்திய அணிகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
அவுஸ்திரேலியா – 7 முறை
இந்தியா – 6 முறை
தென்னாப்பிரிக்கா – 5 முறை
பாகிஸ்தான் – 4 முறை
நாணயச் சுழற்சியில் வென்று இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெற் இழப்பிற்கு 208 ஓட்டங்கள் அடித்தது.. ரச்சின் ரவீந்திரா 44 ஓட்டங்களும், கப்டன் மிட்செல் சான்ட்னர் 47 ஓட்டங்களும் எடுத்தனர்.
கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் , அபிஷேக் சர்மா ஆகியோர் ஒற்றை இலக்கத்தில்ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். ஆனால், பின்னர் இணைந்த இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ஓட்டங்கள் அடித்தார்., கப்டன் சூர்யகுமார் யாதவ் 82 ஓட்டங்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். சிவம் துபே 16 பந்துகளில் 34 ஓட்டங்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி 15.2 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இஷான் கிஷன் ஆட்ட நாயகனாகத் தேர்வி செய்யப்பட்டார்.

