உதைபந்தாட்டத்தில் சாதனைகள் பல படைத்த இத்தாலி, உலகக்கிண்ண கிறிக்கெற்றிலும் தடம் பதித்துள்ளது.
இந்தியாவும், இலங்கையும் இணைந்து 2026 ஆம் ஆண்டு நடத்தும் ரி20 உலகக்க்கிண்ணப் போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிறிக்கெற் வீரர் ஜோ பர்ன்ஸ் தலைமையிலான இத்தாலி அணி
ஐரோப்பிய தகுதிச் சுற்றில் பலம் வாய்ந்த ஸ்கொட்லாந்து, குர்ன்சி ஆகிய நாடுகளை வீழ்த்திய இத்தாலி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
2026 ரி20 உலககிண்ணப் போட்டியில் விளையாட 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன.
ஆசியா ஈஏபி தகுதிச் சுற்றில் மேலும் மூன்று அணிகள் போட்டியில் இருந்து தகுதி பெறும், அதே நேரத்தில் ஆப்பிரிக்கா தகுதிச் சுற்றில் இருந்து மேலும் இரண்டு அணிகள் தகுதி பெறும்.
ஜூலை 11, 2025 நிலவரப்படி ஐசிசி ஆண்கள் ரி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற அணிகள்
ஆப்கானிஸ்தான்,அவுஸ்திரேலியா,பங்களாதேஷ்,கனடா,இங்கிலாந்து,இந்தியா,அயர்லாந்து,நியூசிலாந்து,பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா,இலங்கை,அமெரிக்கா,மேற்கிந்திய தீவுகள், இத்தாலி