Saturday, January 31, 2026 2:48 pm
தமிழ்நாடு அரசின் சார்பில் 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான சின்னத்திரை விருதுகள் மற்றும் 2015-16 முதல் 2021-22 வரையிலான கல்வியாண்டுகளுக்கான எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை சென்னை கலைவாணர் அரங்கில் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார்.
இந்த விருதுப் பட்டியலில் இடம்பெறாத சில திரைப்படங்கள் ,கலைஞர்கள் பற்றி ரசிகர்களும், திரையுலகினரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளில் வெளிவந்த விமர்சன ரீதியாகவும், கலை ரீதியாகவும் பாராட்டப்பட்ட படங்களுக்கும், நடிகர்களுக்கும் விருது கிடைக்காதது சரியா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இயக்குநர் கௌதம் ராஜ் வெளியிட்டுள்ள கருத்தும் கவனம் பெற்றுள்ளது. அவர் தனது எக்ஸ் பதிவில், “ராட்சசி திரைப்படத்தை விட கோமாளியும், பொன்மகள் வந்தாலும் சிறந்த படமாக இருந்திருக்கிறது தமிழ்நாட்டுத் திரைப்பட விருதுகளுக்கு. வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டு, முதல்வர், துணை முதல்வர் ,பள்ளிக் கல்வி அமைச்சர் ஆகியோரை டேக் செய்திருந்தார். அவரது இந்த பதிவு, விருதுகள் வழங்கப்பட்ட விதம் குறித்த அதிருப்தியையும், தேர்வில் உள்ள முன்னுரிமைகள் குறித்த கேள்விகளையும் எழுப்புவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். சி

