‘தெய்வத் திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நெஞ்சை நெகிழ வைத்த சாரா அர்ஜுன், இப்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அவர்களின் புதிய படம் ‘துரந்தர்’ – இதன் டீஸர் நடிகர் ரன்வீர் சிங் பிறந்த நாளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2011-ல் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘தெய்வத் திருமகள்’ திரைப்படத்தில் தனது அழுத்தமான நடிப்பால் அனைவரையும் பாதித்த சிறுமி சாரா அர்ஜுன்.அதன் பின்னர் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்திருந்தார்.
இப்போது, ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங்குடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் வருகிறார் என்பதுதான் ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.