Friday, January 23, 2026 6:18 am
முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க , அவரது சகோதரர் தம்மிக்க ரணதுங்க ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நிலக்கரி டெண்டர்கள் மூலம் இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திற்கு 800 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாகவே குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

