மெக்ஸிகோவில் பெய்து வரும் கனமழை , வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளனர், 65 பேர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த வாரம் மெக்சிகோவில் பெய்த கனமழையால் குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 65 பேர் காணாமல் போயுள்ளதாகவும் திங்கட்கிழமை அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, சில நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கடந்த வாரம் முழுவதும் நீடித்த மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட வளைகுடா கடற்கரை , மத்திய மாநிலங்களில் உள்ள பகுதிகளை வெளியேற்றவும், சுத்தம் செய்யவும், கண்காணிக்கவும் மெக்சிகன் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நியமித்துள்ளனர்.
ஹிடால்கோ மற்றும் வெராக்ரூஸ் மாநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெராக்ரூஸில் 29 இறந்தனர். 18 பேர் காணாமல் போயினர். ஹிடால்கோவில் 21 மரணமானதாகவும், 43 பேர் காணாமல் போனதாகவும் தேசிய சிவில் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லாரா வெலாஸ்குவெஸ் தெரிவித்தார்.