Friday, February 7, 2025 6:42 am
நாட்டை டிஜிட்டல் சமூகமாக மாற்றுவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியை எடுத்து வைத்து, மூன்று புதிய டிஜிட்டல் தொடர்பாடல்கள் இன்று (07) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அறிமுகப்படுத்தப்படும்.
அனைத்து அரசாங்க கொடுப்பனவுகளையும் டிஜிட்டல் மயமாக்குவதற்கான ‘GovPay’ தளத்தை அறிமுகப்படுத்துதல், கொழும்பில் உள்ள பிரதான அலுவலகத்திலிருந்து பிரதேச செயலக மட்டத்திற்கு ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை விரிவுபடுத்துதல் , வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை இலங்கை தூதரகப் பணியகங்களில் மின்னணு முறையில் பெற அனுமதிக்கும் மின்னணு பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் (EBMD) வசதியை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இந்த சேவைகள் இன்று முதல் கிடைக்கும்.

