Tuesday, January 20, 2026 1:27 pm
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே , நளின் பெர்னாண்டோ ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று (20) திகதி நிர்ணயித்துள்ளது.
அதன்படி, மேல்முறையீட்டு மனுக்களின் விசாரணையை உச்ச நீதிமன்றம் மார்ச் 09 ஆம் திகதி ஒத்தியைக்கப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு மனுக்கள் தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன ,நீதிபதி அச்ல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், இரண்டு முன்னாள் அமைச்சர்களும் லங்கா சதோசா மூலம் 14,000 கரம் போர்டுகள் , 1,000 செக்கர்ஸ் போர்டுகளை இறக்குமதி செய்து, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரசார அலுவலகங்களுக்கு விநியோகித்ததாகவும், இதனால் அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகவும் கூறி லஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் வழக்கு தொடரப்பட்டது.
கொழும்பு நிரந்தர உயர் நீதிமன்ற விசாரணை நீதிமன்றம் முன்னாள் அமைச்சர்கள் இருவரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
அதன்படி, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் நலின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இரண்டு முன்னாள் அமைச்சர்களும் தங்கள் தண்டனைகளை ரத்து செய்து அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

