கொழும்பில் உள்ள திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தபோது முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி தொடர்பாக துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாரம் கொழும்பில் உள்ள ஹேவலொக் சிற்றி வீட்டு வளாகத்தின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது, அதன் பிறகு செவ்வாய்க்கிழமை இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.துப்பாக்கி தொடர்பான விசாரணைகளை காவல்துறை நேற்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைத்தது.