பங்களாதேஷில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம், அவரது வீடு ஆகியவற்றை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி, தீ வைத்துள்ளனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஒன்லைன் வாயிலாக உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனைத் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, இராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார்.
ஷேக் ஹசீனா ஒன்லைன் வாயிலாக உரை நிகழ்த்த அவாமி லீக்கின் தற்போது கலைக்கப்பட்ட மாணவர் பிரிவான சத்ரா லீக்,ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி நேற்று இரவு (பெப்ரவரி 5) ஷேக் ஹசீனா உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. தற்போதைய ஆட்சிக்கு எதிராக ஒரு எதிர்ப்பை பதிவு செய்ய நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தகவல் பரவியது. முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா நேரலையாக ஒன்லைனில் உரையாற்ற இருப்பதாக தகவல் பரவிய நிலையில், போராட்டக்காரர்கள் குழுவினர், டாக்காவில் உள்ள அவரது வீட்டை சேதப்படுத்தி தீ வைத்தனர். பல போராட்டக்காரர்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் ஏறி, கடப்பாரைகள் , மரக் கட்டைகளைப் பயன்படுத்தி ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு