Friday, January 16, 2026 8:34 pm
அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டம், 2028 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளைத் தவிர, “முக்கிய விளையாட்டுகள்” என்று வகைப்படுத்தும் பல தடகளப் போட்டிகளை ட்ரம்ப் நிர்வாகம் அடையாளம் கண்டு அவற்றுக்கு விஸா வழங்க முடிவு செய்துள்ளது.சுமார் 40 நாடுகளில் விஸா தடை இருந்தபோதிலும், விளையாட்டு வீரர்கள் , பயிற்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்க அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து அமெரிக்க தூதரகங்களுக்கும் கடந்த புதன்கிழமை அனுப்பப்பட்டசெய்தியில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இருப்பினும், போட்டிகளில் கலந்து கொள்ளத் திட்டமிடும் வெளிநாட்டு பார்வையாளர்கள், ஊடகங்கள் , பெருநிறுவன ஆதரவாளர்கள் மற்றொரு விலக்குக்குத் தகுதி பெறாவிட்டால் அவர்கள் இன்னும் தடை செய்யப்படுவார்கள் என்றும் “உலகக் கிண்ணம், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் மற்றும் பிற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கான பயணிகளின் ஒரு சிறிய குழு மட்டுமே விதிவிலக்குக்கு தகுதி பெறுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
39 நாடுகளில், ஆப்கானிஸ்தான், புர்கினா பாசோ, சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லாவோஸ், லிபியா, மாலி, மியான்மர், நைஜர், சியரா லியோன், சோமாலியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, ஏமன் , பாலஸ்தீன ஆணையத்தால் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்களைக் கொண்டவர்களுக்கு முழு பயணத் தடை பொருந்தும்.
அங்கோலா, ஆன்டிகுவா , பார்புடா, பெனின், புருண்டி, கியூபா, டொமினிகா, காபோன், காம்பியா, ஐவரி கோஸ்ட், மலாவி, மவுரித்தேனியா, செனகல், தான்சானியா, டோங்கா, டோகோ, வெனிசுலா, சாம்பியா ,ஸிம்பாப்வே ஆகிய நாடுகளின் குடிமக்களுக்கு பகுதி தடை அமலில் உள்ளது.

