சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மேற்கு இந்தியாவை எதிர்த்து விளையாடிய இந்தியா சம்பியனானது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மூத்த வீரர்கள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணி சச்சின் டெண்டுல்கர் தலைமையில் விளையாடியது. பிரையன் லாரா தலைமையில் மேற்கு இந்தியா விளையாடியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியா முதலில் துடுப்படுத்தாடியது. டுவைன் ஸ்மித் 45 ஓட்டங்கள், லெண்டில் சிம்மன்ஸ் 57 ஓட்டங்கள் எடுத்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய தரப்பில் வினய் குமார் 3 விக்கெட்களையும், ஷாபாஸ் நதீம் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இந்திய அணி 17.1 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து இலக்கை எட்டி பட்டத்தைக் கைப்பற்றியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அம்பத்தி ராயுடு அபாரமாக விளையாடி 74 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் ரி20 கிரிக்கெட்டின் முதல் சீசன் இதுதான் என்பது இது சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட தனியார் ரி20 லீக் தொடராகும்