இலங்கை சினிமாவின் ராணி எனக் கொண்டாடப்படும் மாலினி பொன்சேகா, இன்று காலை சனிக்கிழமை தனது 76 வயதில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.
1968 ஆம் ஆண்டு திஸ்ஸ லியான்சூரிய இயக்கிய புஞ்சி பாபா படத்தின் மூலம் மாலினி பொன்சேகா அறிமுகமானார். அவர் 140 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், லங்கை,இந்திய கூட்டுத் தயாரிப்பான பைலட் பிரேம்நாத் தமிழ்ப் படத்தில் சிவாஜி கணேசனுடன் நடித்தார்.
1963 ஆம் ஆண்டு “நோரத ரத” நாடகத்துடன் மேடையில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். 14 மேடை நாடகங்களில் நடித்த அவர் இலங்கையின் முதல் பெண் தொலைக்காட்சி நாடக இயக்குநரானார், நிருபமாலாவை இயக்கி நடித்தார்.
1968 ஆம் ஆண்டு, “அகல் வெசா” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த மேடை நாடக நடிகைக்கான தேசிய விருதை வென்றார். 1969 ஆம் ஆண்டு தேசிய மாநில நாடக விழாவில் சிறந்த நடிகைக்கான விருதையும், பல சிறந்த நடிகைக்கான சரசவிய விருதையும் பல முறை பெற்றார்.
சர்வதேச அளவில், மொஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதையும், புது டில்லி திரைப்பட விழாவில் விருதையும் பெற்ற முதல் இலங்கை நடிகை என்ற பெருமையைப் பெற்றார். CNN ஆல் ஆசியாவின் 25 சிறந்த திரைப்பட நடிகர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டார்.