கனேடிய பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து லிபரல் கட்சி தலைமைப் பதவிக்கு நடந்த தேர்தலில் மார்க் கானி 86 வீதமான வாக்குகளைப் பெற்று அடுத்த பிரதமராகும் தகுதியைப் பெற்றுள்ளார்.
கனேடிய மத்திய வங்கியினதும், இங்கிலாந்து வங்கியினதும் முன்னாள் ஆளுனரான இவர், விரைவில் கனேடிய பிரதமராக பதவியேற்பதுடன் தனது அமைச்சரவையையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தனது உரையில் ‘ நான் மக்களில் அக்கறை கொண்டவனாக இருப்பதற்கு, ஒரு பொருளாதார நிபுணர் ஆக இருப்பது மட்டும் காரணம் இல்லை, ஒரு லிபரல் ஆக இருப்பதுமே காரணம்’ எனக் குறிப்பிட்டார்.