மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் 800 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
13 , 14 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இவர்கள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 13 , 14 ஆகிய திகதிகளில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக மொத்தம் 412 பேர் இலங்கை தேசிய மருத்துவமனையில் ) அனுமதிக்கப்பட்டனர், அதில் 6 பேர் வருகையிலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாக NHSL இன் விபத்துப் பிரிவின் இயக்குநர் டாக்டர் இந்திகா ஜகோடா தெரிவித்தார்.இரண்டு நாட்களில் சுமார் 80 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன.
பட்டாசு வெடித்து காயங்கள் இந்த ஆண்டு கடுமையாகக் குறைந்துள்ளன, இரண்டு பட்டாஸ் விபத்துகள் மட்டுமே பதிவாகியுள்ளன.