Friday, January 16, 2026 4:12 pm
குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வீராங்கனை ஆயுஷி சோனி ,மகளிர் ஐபிஎல் வரலாற்றிலேயே ‘ரிட்டயர்டு அவுட்’ ஆன முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஜனவரி 13 அனாம் திகதி நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆயுஷி சோனி தனது அறிமுக போட்டியில் விளையாடினார். 6-வது வரிசையில் களமிறங்கிய அவர், 14 பந்துகளை எதிர்கொண்டு 11 ரன் ஓட்டங்கள் மட்டும் எடுத்தார்.
அணியின் ரன் விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், 16-வது ஓவர் முடிவில் குஜராத் அணி நிர்வாகம் அவரை ‘ரிட்டயர்டு அவுட்’ முறையில் வெளியேற செய்தது. அவருக்கு பதிலாக களமிறங்கிய பாரதி புல்மாலி, அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 36 ரன் ஓட்டங்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கிரிக்கெட்டில் இது ஒரு தந்திரமான முடிவாக பார்க்கப்பட்டாலும், மகளிர் ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

