பெற்றாவின் முதல் குறுக்குத் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு கடையில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் உதவுவதற்காக இலங்கை விமானப்படை (SLAF) பெல் 212 ஹெலிகாப்டர் இன்று சனிக்கிழமை (20) பயன்படுத்தப்பட்டது.
12 தீயணைப்பு இயந்திரங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. லிகாப்டரைத் தவிர, தரைவழி நடவடிக்கைகளுக்கு உதவ இரண்டு விமானப்படை தீயணைப்பு லொறிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.